Monday, December 6, 2010

மறக்கமுடியுமா? 1

'செல்வி'ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் மக்களனுபவித்த கொடுமைகளும் குறிப்பாக மாணவர்கள் சந்தித்த பேரிடர்களில் சில..
ஜெயலலிதாவின் திட்டங்கள் எல்லாம்  வெற்று அறிவிப்புகளாகவே நின்று விட்டதற்கு ஏராளாமான உதாரணங்கள் நாம் அளித்திட முடியும்.2002 ஆம் ஆண்டு இறுதியில் தூக்கத்திலிருந்து எழுந்தவரைப் போல திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.சென்னையிலிருந்து  40 கி.மீ. தெற்க்கே மாமல்லபுரத்துக்கு அருகில் மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் பல்லாயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமான் முறையில் தலைமை செயலகத்தை அமைக்கப் போவதாக அறிவித்தார்.அதோடு மறந்துவிட்ட செல்வி'ஜெயலலிதா திடீரென சுயநினைவு திரும்பியவராய் 4-4-2003 இல் சென்னை ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு,அந்த இடத்தில் தலைமை செயலகம் கட்டப்படுமென அறிவித்தார்.அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே மாணவிகள்,ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் என அனைவரும் சாலையில் அமர்ந்தனர்.மாணவிகளின் போராட்டம் பெருமளவிலே வெடித்தது.கல்லூரியை இடிக்கக்கூடாது என்கிற குரல் நான்கு புறங்களிலிருந்தும் ஓங்கி ஒலித்தது.தமிழினத்தின்  மூத்த தலைவரான தாங்கள் இப்பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கலைஞரைச் சந்தித்து கல்லூரி மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.சந்திப்பின்போது கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு தி.மு.க.வின் தார்மீக ஆதரவு உண்டு என அறிவித்தார் கலைஞர்.மாணவிகளின் போராட்டம் பெருமளவிலேவெடித்தது. இதனையடுத்து  போராட்டத்தை முறியடிக்கும் விதமாக  5-4-2003 முதல் கல்லூரிக்கும்,விடுதிக்கும் விடுமுறை அறிவித்தது அரசு.ஆனால் மாணவிகளோ இரவு,பகலாக கல்லூரி வளாகத்திலேயே தங்கி தங்களது  போராட்டங்களை நடத்தினர்.கல்லூரி வழியாக சென்ற 'செல்வி'ஜெயலலிதாவின் காரை மாணவிகள் வழி மறிக்க முயன்றனர்.இதனால் மாணவிகள் மீது காவல்துறை  தடியடி நடத்தி ஐந்து மாணவிகளை காயப்படுத்தியது.இதன் பின்னர் செல்வி'ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும்  அவ்வழியை  தவிர்த்தார். மாணவிகளின் திட்டத்தை அறிந்திடவும்,மாணவிகளுடன் கலந்து உளவு வேலை செய்த பெண் காவலர் ஒருவா,மாணவிகளிடம் மாட்டிக்கொண்டு உதை வாங்கினார் .மாணவிகளின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் இயக்கங்களும் (பா.ஜ.க.,அ.தி.மு.க. தவிர) தங்கள் தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர்.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததை அடுத்து,இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின்,சட்டமன்ற உறுப்பினர்கள்  எஸ்.ஏ.எம்.உசேன்,எ.வ.வேலு,பொன்முடி,ஜெ.அன்பழகன்,இள.புகழேந்தி மற்றும் பரணிகுமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாணவிகளை போராட்டக் களத்தில் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்தி தார்மீக ஆதரவு தெரிவித்தனர்.இராணி மேரிக் கல்லூரியை இடித்துவிடக்கூடாது என அரசியல் இயக்கங்களும் மாணவ அமைப்புகளும்,பொதுமக்களும் போராடியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.88 ஆண்டுகள் பழைமை மிக்கதான இராணி மேரிக் கல்லூரி,இந்தியாவிலேயே முதல் மகளிர் கல்லூரியாகும்.இக்கல்லூரி வளாகத்தினுள் அமைந்துள்ள 26 கட்டிடங்களில் பெரும்பான்மையானவை அறிய கலைத்தன்மை கொண்டவை என கட்டிடக் கலை வல்லுனர்கள் கூறினார்கள் .இதில் படிக்கிற 3000க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பெரும்பாலானோர் நடுத்தர,ஏழைச் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களான பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களின் வீடு பிள்ளைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனக் கூறிய  செல்வி'ஜெயலலிதா யார் தெரியுமா? ரேசனில் வழங்கும்  அரிசி விலையை உயர்த்தவர் மாட்டேன் எனக் கூறி சில நாட்களில் உயர்த்தியவர்தான்.விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே மாட்டேன் என அறிவித்து சில மாதங்களிலேயே ரத்து செய்தவர்தான்.இப்படி,தான் சொல்லுவதை எல்லாம் வாக்குத் தவறாமல் செயல் படுத்திய 'செல்வி'ஜெயலலிதா இராணி மேரிக் கல்லூரிக்கு  மாற்று இடம் வழங்குவோம் என அறிவித்தார்.ஏற்கனவே செல்வி'ஜெயலலிதாவின் ஏராளமான வாக்குறுதிகளை  பார்த்திருந்த  மாணவர் சமுதாயம் இவ்வாக்குறுதியை நமபத்தயாராக இல்லை.கல்லூரி இடிக்கப்பட மாட்டாது என முறையாக அரசு அறிவிக்கிற வரை  மாணவிகளின் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.இக்கல்லூரியின் முன்னாள் மாணவியான 102 வயது நிரம்பிய மூதாட்டி ஆலிவ்பால் கல்லூரியை இடிக்கவே கூடாது எனவும் பழுதடைந்திருந்தால் அதனை புனரமைக்க மாணவிகளின் சார்பாக ஒரு கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் அறிவித்து போராட்டத்தில் இறங்கினார்.கல்லூரி மாணவிகளின் போராட்டம் மேலும் வலுவடைந்தது.கல்லூரி இடிக்கபடக்கூடாதென தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 6-4-2003 அன்று கல்லூரியை இடிக்க இடைக்காலத் தடைவிதித்தது நீதிமன்றம்.இத்தடை உத்தரவுக்கு பின்னர் போராட்டத்தில் வேகம் குறைந்ததே தவிர நின்று விடவில்லை,இடிக்கவே கூடாது என நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலோ அல்லது இடிக்கவே மாட்டோம் என அரசு அறிவிக்கும் வரையிலோ எங்களின் போராட்டம் தொடருமென அறிவித்தனர் மாணவியர்.ஆனால் மாணவிகளை மிரட்டும் பணியிலும் 10-4-2003இல் நடக்கவிருந்த அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை திசை திருப்பும் வகையிலும் 9-4-2003 அன்று நள்ளிரவில்,கல்லூரிக்குள் அத்துமீறி முழைந்து மாணவிகளி போராட தூண்டினார் எனவும் காவலாளியை மிரட்டினார் எனவும் கூறி ஸ்டாலினின்  வீட்டினுள் காவல்துறை அடாவடி முறையில் எகிறிக் குதித்து அவரை கைது செய்தது.கைது நடவடிக்கையின்போது ஸ்டாலினுடன் இருந்த உசேன்,பொன்முடி,அன்பழகன் உள்ளிட்டோரும் கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இப்படி தான்தோன்றி தனமாக காட்டாட்ச்சி நடத்திய செல்வி'ஜெயலலிதாவை அடுத்து வரும்  சட்டமன்ற தேர்தலில் முதல்வராக்கியே தீருவது என ஒரு கூட்டம் செயல் பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கையில்,இது போன்ற செயல்களையெல்லாம்  மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவார்கள் என்று நினைத்த அந்த கூட்டத்தை என்னவென்று சொல்வது.

1 comment: