Friday, August 20, 2010

Landscape in the Mist..

இரு தினங்களுக்கு முன் ஓர் இரவில்..ஒரு திரைப்படம் கண்டேன்! இந்த படம் தங்களுடைய தந்தையைத்தேடி செல்லும் இரு குழந்தைகள் பற்றிய கதை.voula என்ற பெண் தன் தம்பியுடன் அவர்களின் தந்தையின் இருப்பிடத்தை அறிய, பல தடவை முயன்று இறுதியாக ஓர் இரவில் ஜெர்மனி நோக்கி தங்களின் ரயில் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் அவர்களை டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்து அடுத்து நிற்கும் OINOH என்னும் ஸ்டேஷனில் இறக்கி கார்டிடம் ஒப்படைக்கிறார்..அங்கிருக்கும் அவரோ நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கிறார்..அதற்க்கு அவர்கள் இருவரும் வேறு யாரையோ கேள்வி கேட்பது மாதிரி பென்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிரார்கள்.இதை பொறுக்கமுடியாத அவரோ உடனே அவர் போனை எடுத்து போலீசை அழைக்கும் தருணத்தில் அந்த சிறுமி "நாங்கள் எங்க மாமாவை பார்க்க வந்தோம்" என்று சொல்கிறாள்.இதெல்லாம் அந்த ஓர் இரவிலேயே நடந்து முடிக்க,மறுநாள் ஒரு போலீஸ்காரர் அந்த இருவரையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் மாமா இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.அவர் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.."நீங்க எப்படி இங்க" என்று பாசத்தோடு தழுவி அனைத்து செல்கிறார் என்றுதான் நானும் நினைதேன்.ஆனால் உடன் வந்த போலீஸ்காரரிடம் தன்னுடைய சிகரெட் ஒன்றை கொடுத்து, "இவர்களின் அம்மா இவர்களிடம் பொய் சொல்லிருக்கா என்றும்.. இவர்களின் தந்தை ஜெர்மனியில் இல்லை" ஆகையால் இவர்களை நான் ஏற்கமுடியாது என தன் புலம்பலை கொட்டி தீர்த்துக்கொண்டிருக்கையில்..அந்த சிறுமி இதை கேட்டு விடுகிறாள்.உடனே இல்லை நீ பொய் சொல்கிறாய்,எண்களின் தந்தை ஜெர்மனியில் தான் உள்ளார் என்று கத்திவிட்டு கோபித்து கொண்டு மீண்டும் அந்த போலீஸ்காரரிடமே காவல் நிலையம் சென்று விடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனின் பென்ச்சில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, அந்த ஊரில் திடீரென பனிபொழிவு ஏற்படுவதை அனைவரும் இன்பப்பெருக்கோடு ரசித்துக்கொண்டிருக்கையில் இவர்கள் இருவரும் நைசாக ஜூட் விடுகிறார்கள்..அப்படியேசுற்றித்திரிந்து ஒரு நேஷனல் ஐவேஸ் மாதிரியான ஒரு சாலையில்,ஒரு பஞ்ச்சர் ஆனா கேரவன் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது அந்த டிரைவரும் அதை பழுதுபார்த்து பின் இவர்களை நோக்கி இங்கிருந்து ஊருக்குள் செல்வது ரொம்ப தூரம் என்றும்,தன் வண்டியிலேயே அவர்களை அழைத்து சென்று ஊருக்குள் விடுவதாகவும் கூறுகிறார்.அதில் போகலாமா?வேண்டாமா? என்ற தயக்கத்திலேயே கால்கள் மெல்ல நடக்கிறது,பிறகு மறுபடியும் அந்த டிரைவர் அழைத்ததும் அதில் ஏறிக்கொள்கிறார்கள்.அந்த வண்டியினுள் தொங்கும் அங்கிகளே அவர் நாடக துறையை சேர்ந்தவர் என்று சொல்லிவிடுகிறது,அந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அந்த கேரவன் சேரவேண்டிய இடம் வந்து நிற்கிறது..அங்கு அந்த சிறுவன் அந்த நாடக குழுவைப்பார்க்கிறான்..தான் வெளியில் சென்றுவருவதாகக்கூறி ஒரேச்ட்ஸ் என்ற அந்த நாடக நடிகன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புகிறான்...இந்த சிறுவனோ பசித் தாங்காமல் கேரவனில் தூங்கி கொண்டிருக்கும் தன் அக்காவை எழுப்பாமல் ,இறை தேடி ஓர் உணவகம் செல்கிறான் அங்கு தனக்கு "பிரட் கொடு..!" என்று கேட்க்கிறான்..அதற்க்கு அவர் "காசு இருக்கா.." என்று இந்த சிறுவனை பார்த்து கேட்க்கிறார் எதற்கும் அசராமல் "இருந்தா கொடுக்க மாட்டேனா எனக்கு பசிக்குது,பிரட் கொடு..!" என்று மீண்டும் கேட்க்கும்போது.."சரி உனக்கு பிரட் வேணும்னா இங்க இருக்கிற மேஜைகள் எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு அதுக்கு சம்பளமா நீ கேட்ட ப்ரெட்ஆ வாங்கிட்டு போ...!" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் .உடனே அந்த சிறுவன் மேஜைகளை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான்..அப்போ அங்கு வரும் ஒரு வயலின்காரர் (நம்மூர்ல சாட்டையடிச்சிட்டு காசு கேப்பாங்களே அது மாதிரி)உள்ளே நுழைகிறார். அவர் இந்த சிறுவனை பார்த்ததும் வணக்கம் தெரிவித்து வயலினை இசைக்க ஆரம்பிக்கிறார்,உடனே இந்த சிறுவனும் மேஜைகளை சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு அங்கு இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து அந்த இசையை ரசிக்கிறான்.. அவ்வளவு வலி நிறைந்த இசை அது... சத்தம் கேட்டு உள்ளே இருந்து வரும் அந்த கடைக்காரர் அவரை துரத்துகிறார்..அந்த இசை முடிந்த பிறகு அந்த சிறுவன் எல்லாவற்றையும் மறந்து கைத்தட்டுகிறான்..உடனே அந்த ஓட்டல்காரர் அவனை முறைக்க மீண்டும் தன் வேலையை தொடர்கிறான் அந்த சிறுவன்.இதற்கிடையில் தன் தம்பியை தான் தொலைத்து விட்டதாக நினைத்து தேடிக்கொண்டிருக்கிற voula தன் தம்பியை சந்திக்கும் அந்த காட்சி ரொம்பவே உணர்வுபூர்வமானது..தன்அக்காவை பார்த்து அந்த சிறுவன் "நான் வேலைசெய்து உனக்கு பிரட் வாங்கி வந்திருக்கிறேன்..!" என்று சொல்லும்போது..அவள் அவனை கட்டி அணைத்து அழுகிறாள். அந்தநாள் நாள் அப்படியே செல்ல, மெல்ல அந்த நாடக கோஷ்டியிடம் இருந்தும் இவர்கள் விலகிச்செல்ல முற்படும்போதுதான், ஒரு மழைநாளில் அகலமான சாலையில் இருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த சிறுவன் தன்னால் இதற்க்கு மேல் நடக்க முடியாது என்று அந்த மழை பொழியும் சாலையிலேயே அமர்ந்துவிடுகிறான். உடனே இவள் சாலையில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை எல்லாம் மறித்து லிப்ட் கேட்க்கிறாள்.மறுபடியும் அவர்களுக்கு ஒரு வண்டி கிடைக்கிறது அது பெரிய கூட்ஸ் கார்ரியர் மாதிரி ஒரு வண்டி.அந்த டிரைவரும் அவர்கள் போகவேண்டிய இடத்தை கேட்டு ஏற்றி கொண்டு செல்கிறார்.இரவு ஒரு உணவகத்தில் வண்டி நிற்கிறது மூவரும் சாப்பிட இறங்குகிறார்கள் டிரைவர் தனக்கு சரக்கு போட்டுக்கொண்டும் அந்த இருவருக்கும் அவர்களின் பசியை தீர்த்தும் அந்த இடத்தை காலி செய்கிறார். மீண்டும் வண்டி அங்கிருந்து கிளம்புகிறது.. இரவு முழுதும் வண்டி ஓட்டிய களைப்பில்,வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி தான் தூங்கபோவதாக சொல்லி இறங்குகிறார்.அவர் இறங்கிவிட்டு அந்த சிறுமியையும் இறங்க வற்புறுத்துகிறார் கீழே இறங்கும் அந்த சிறுமி அந்த டிரைவரின் கையை உதறிவிட்டு ஓட முயல்கிறாள்..ஆனால் அந்த டிரைவரோ விடாமல் துரத்தி சென்று பிடித்து தன லாரியின் பின் பக்கத்தில் தூக்கி உள்ளே தள்ளி இவரும் உள்ளே ஏறுகிறார்.கொஞ்சநேரம்.. அமைதி,மௌனம்,பரபரப்பின்மை எல்லாம் முடிந்து அந்த டிரைவர் தன கலைந்த உடைகளை சரி செய்தவாறே கீழே குதிக்கிறார்.இவர் இறங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி மெல்லமாக தன் கால்களை நகர்த்தி ரொம்ப பொறுமையாக கலைந்த தலை முடியோடும்,களையப்பட்ட தன் ஆடைகளோடும் அந்த வண்டியிலேயே அமர்ந்துகொண்டிருக்கிறாள் அப்பொழுது திரையில் தோன்றும் அந்த காட்சி உண்மையிலேயே..இந்த படத்தை பார்க்கும் அனைவரின் உள்ளமும் வயது,இனம்,மொழி,பாலினம் என்ற அனைத்தையும் கடந்து வெறும் சக மனிதனாக மட்டுமே உணர்ந்து அழும்..இந்த படத்தை பார்க்கும் அனைவரின் உதடுகளும் மௌனத்தை மரணிக்கசெய்யும்.


இந்த படத்தில் ஆரம்ப காட்சி முதல் திரையில் ஒலிக்கும் அந்த இசை மனதை மயக்கம் கொள்ள செய்யாமல் அந்த இரு குழந்தைகளின் வலியை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.அந்த இருவரும் சாலைகள் எங்கும் சுற்றி திரியும் காட்சிகள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக படம்பிடிக்கிப்பட்டிருப்பது ரொம்பவே அழகு என்பதைவிட ரொம்பவே எதார்த்தம்.குறிப்பாக ஒரு குதிரை இறக்கும் காட்சியை ,வயதால் மட்டுமே வளர்ந்த மனிதர்களையும் அந்த இரண்டு குழந்தைகளையும் வைத்து மனித நேயத்தை சொல்லும் காட்சி நம் முகத்தில் நம்மையே காறித்துப்ப வைத்துள்ளார் இயக்குனர்.அந்த இரு குழந்தைகளும் ரயிலில் பயணிக்கும் மற்றொரு காட்சியில் தன் தந்தைக்கு தன் மனதிற்குள்ளேயே மடல் தீட்டும் காட்சியிலும் சரி.அந்த வலிகளை தாங்கியே பயணிக்கிறது கதை.கடைசியாய் திரையில் தோன்றிய அந்தக்காட்சி என் நினைவிற்குள் ஊடுருவும்போதெல்லாம்மீதி படத்தை பார்க்கும் வாய்ப்பை நான் பெறுவேனா..என்பது சந்தேகமே.

1 comment: