Tuesday, August 17, 2010

பெண்ணொருத்தி..என்னிடத்தில்..



இன்று மாலை கடுமையான வேலை பளுவுக்கு இடையில் ஒரு செல்பேசி அழைப்பு...!! ஏற்கனவே இரு அழைப்புகளை எதிர்பார்த்துகொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ நான்கைந்து மணிக்குள்ளாகவே அழைப்பை ஏற்றேன்..மறுமுனையில் ஒரு பெண்!!அவளுடைய வயது ஏறத்தாழ 22ல் இருந்து 24 வரை இருக்கலாம் என்பது என் அனுமானம்.எடுத்த உடன் யார் என்று கேட்டதற்கு,"உங்க பேர் என்ன..!!" என்று மறுமுனையில் ஒரு வழ வழ குழ குழ குரலில் ஒலித்தது என்னுடைய கோபத்தையும் நான் வெளிக்காட்டாமல் என் பெயரை நான் குறிப்பிட்டேன் ..உடனே அம்முனயிலிருந்து "இவ்ளோ அசிங்கமாவா மெசேஜ் அனுப்பறது..!!" என்று அவளுடைய கோபத்தை கக்கினாள்.....அதிர்ந்து போன நான்! ஒரு சின்ன தடுமாற்றத்திற்கு பிறகு சுதாரித்துக்கொண்டு.."முதல்ல நீ யாரு,எங்கிருந்து பேசற,என்ன நம்பர்,யாரு உனக்கு மெசேஜ் அனுப்புனா..என்று ஒரு குழப்பத்தோடவே பட்டியலிட்டேன்..மறுபடியும் அந்த முனையிலிருந்து "உங்க பிரெண்ட்ஸ்குள்ள இப்படி பேசிக்கலாம்..!யாருக்கு அனுப்புரோம்னு நம்பர் கரெக்டா செக் பண்ணி அனுப்புங்க..எவ்ளோ அசிகமா இருக்கு தெரியுமா இந்த மெசேஜ் ..என்னால சொல்லக்கூ".............. !!!பணிக்காலம் விரயமாவதை விரும்பாத உயரதிகாரி,தன் குரல் கணைப்பில்..என் அலுவல் தொடர என்னை பணித்தார்..!!அந்த உரையாடல் என்னால் துண்டிக்கப்பட்டது..பணிதொடர்ந்த பின்பும் ஒரே குழப்பம்..நான் பொதுவா நண்பர்களோடு குறுஞ்செய்தியில் உரையாடுவாது கிடையாது.அப்படியே இருந்தாலும் அது ரொம்ப ரொம்ப அரிதான ஒரு செயலாகத்தான் அமையும்.அதுவும் தெரியாதவர்களிடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது. என்னுடைய செல்பேசியை யாரும் உபயோகப்படுத்தவும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியமாகமுடியும்...! ஆனா ஒன்னு..கடைசி வரைக்கும் வாங்க போங்கனு மரியாதையாதான் பேசினா..ஒரு வேலை யாராவது என்னை கும்மியடிக்க செய்திருக்கலாமோ.. என்று தோன்றியதைத்தவிர வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை.. விளையாட்டாக இப்படி ஒரு செயலை செய்திருப்பாயின்.. அவள் பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருப்பவரே தவிர பெண் அல்ல என்பதுதான் என்னுடைய திண்ணமான எண்ணம்.. காபி இடைவேளையில் என் தோழி ஒருத்தியை தொடர்பு கொண்டு நடந்தவைகளை விவரித்தேன்..அவளுக்கு ஒன்றுமே புரியாத நிலையில்(எனக்கு சுத்தினத விட அவளுக்கு அதிகமாவே சுத்திடிச்சு..) எனக்கு அழைப்பு வந்த ennai அவளிடம் கொடுத்து அது யார்???என்று விசாரித்து தகவல் சொல்லும்படி உதவி கோரினேன்..அதற்க்கு அவளும் ,"சரிடா.. ஆத்திரபடாத.. உன் வேலைய பாரு இத நான் பாத்துகுறேண்டா.." என்று அவள் சொன்னபோது தோழி என்ற வார்த்தைக்கான பொருளை எனக்கு உணர்த்தினாள்... இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..என் செய்ய ஸ்ரீதேவி என்று உண்டென்றால்,மூதேவி என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்கிறது.

No comments:

Post a Comment