Sunday, August 8, 2010

வாக்க-வாக்காவும்!!!பீர் பாட்டிலும்!!!

போன சாட்டர்டே அன்னைக்கு இரவு பிரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்துவிட்டு,ஊரெல்லாம் சுற்றிவிட்டு சரி வீட்டிற்கு கிளம்பலாம்..என்று நினைத்த நேரத்தில் தான்..... அது நிகழ்ந்தது. ஆம்! ஒரு தொலைபேசி அழைப்பு என் அலுவலக நண்பரிடமிருந்து இன்னைக்கு சாட்டர்டே நைட்டு! அதனால எல்லோரும் வெளியில நைட் அவுட்டு போகிறோம், அதனால நீயும் சீக்கிரம் வந்து சேரு'னு சொல்லி என் விருப்பம் கேட்காமலே, அவர் விருப்பத்தை மட்டும் சொல்லி தொடர்பை துண்டித்தார்!.அப்பொழுது எனக்கு தோன்றியது இரண்டே விஷயங்கள் தான்,ஒன்று என் மக்களை தவிர எவருடனும் இதுவரை இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை,இவங்க நம்மளை அழைக்கிராங்களே! என்பது.மற்றோன்று வேற என்ன சாப்பாடுதான்.. இவனுங்க சரக்கு அடிச்சிட்டு என்ஜாய் பண்ணிக்குவாங்க,நாம் குடிக்கிற பழக்கத்த இன்னும் ஆரம்பிக்கில வேற,நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது'னு அப்புறம் அடுத்த ஐந்து நிமிடத்தில் எனக்குள் ஓர் அவசர பொதுக்குழு கூட்டி!!போகலாம் என தீர்மானம் நிறைவேற்றி!!! அதை அடுத்த சில மணிகளில் நிறைவேற்றியும் விட்டேன்!!!!!!!..அடுத்த இருபது நிமிடங்களுக்கு "எங்க இருக்க"," எங்க இருக்க"னு கால் மேல கால போட்டு, ....கால் வலிச்சதோ இல்லையோ....என் வாய் வலிச்சது தான் மிச்சம்! இதுபோன்ற நேரங்களிலெல்லாம் என் மக்களை நினைத்து பெருமை பட்டுக்கொள்வேன். ஒரு வழியாக எல்லாரும் அசம்பல் ஆகி,இந்த பரபரப்பான சென்னையின்... அந்த பரபரப்பின்றி காணப்பட்ட அந்த 'பப்'இன் பார்கிங்கிர்க்கு வந்து சேர்ந்தோம்!ஒரு நிமிடம் அப்போதும் என் மக்களின் நினைவு என்னை விட்டு நீங்க மறந்து நான் 'பப்'ற்கு போகும் இந்நிகழ்வை என் மக்கள் கேள்விப்பட்டால்..எப்படி ரியாக்ட் பானுவாங்குன்னு நெனச்சு உள்ளுக்குள்ள சிரிச்சிட்டு இருந்தேன்.சரி உள்ளார போகலாம்னு சொல்லி சுவைத்துகொண்டிருந்த தம்மை என் காலடிக்கு காணிக்கையாக்கி ( இந்த டயருக்கு கீழ எலுமிச்சை ஜூஸ் போடுவாங்களே அது மாதிரி )உள்ளே நுழைந்தோம்.எங்களுக்கு முன் நடந்து போய் கொண்டிருந்த அந்த பெண்ணின் முதுகை பார்த்த பின் ஒரு வேலை அவரும் நித்யானந்தாவின ரசிகையாக இருப்பாரோ என்னவோ என்று எனக்குள்ளே ஒரு பதில் சொல்லிகொண்டேன்,ஏன்னா ஜன்னலை திறந்துவையுங்கள் காற்று உள்ளே வரட்டும்'னு அவர்தானே சொல்லிருக்கார்!..இப்படியாக ஒவ்வொருவருவருக்கும் ஒரு கமெண்டை உள்ளுக்குள் உரித்தாக்கி லிப்டிற்க்குள் சென்றோம்.நான் பொறுமையாக நடந்து செல்கையில் வழக்கம் போல் உடன் வந்தவர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் லொட்டு,லொசுக்கு எல்லாம் முடித்து முடித்து என்னை அழைத்தார்கள்.நானும் பாதி முடித்த தம்மை மீதி அப்படியே போட்டுவிட்டு அதற்க்கு அப்பவே மரணதண்டனை நிறைவேற்றினேன். உள்ளே நுழைவதற்கு முன் என்ட்ரன்ஸ்லேய ஈ.பி.32 ஆயில் பாரல் மாதிரி ஒரு உருவம் கார்கோஸ்அண்ட் ரவுண்ட் நெக் பனியன் போட்டுக்கொண்டு நான் பவுன்செர் என்று சொல்லாமல் சொன்னார்..(நாம ஏன் அந்த பக்கம் போறோம்.)கதவை திறந்து உள்ளே செல்வதற்குள் என் னோடு வந்த எல்லா மக்காக்களும் உள்ளே நுழைந்திருந்தார்கள்.நானும் உள் போயி எதெது எங்கெங்கே இருக்கு டான்ஸ் ப்ளோர் எவ்வளவு பெரிசு,சரக்கு ரேட் எவ்ளோ,சைடுடிஷ் எவ்ளோ,டீஜே பேரு என்ன,எதனை மணிக்கு க்ளோசிங் டைம்'னெல்லாம் என்கொயிரில ஈடுபட்டிருந்த நண்பரை அழைத்து சேகரித்த தகவல்களை தரவிறக்கம் செய்துமுடித்தேன். பீரோ..ஹாட்டோ!!எடுத்தாலும் இருநூறு ரூபாயாம்..ஆனா கோக்கு பெப்சி எல்லாம் ஆடித்தள்ளுபடியோ என்னமோ எல்லாம் பாதி ரேட்டுதான் ஈச் 100 ரூபாய்.ம்யூசிக் ஒன்னும் சொல்லும்படியா இல்லைன்னு'தான் தோணுது,திடீரென்று ஷக்கிராவின் வாக்கா-வாக்கா பாடல் ஒலிக்க இளசுகள் எல்லாம் ஒரே ஆராவாரம்தான்..நான் இந்த 'பப்'பின் தரத்தை அறிவதற்கு எனக்கு அது உதவியது.தொடர்ந்து நான் கேட்டிராத பாடல்களே ஒலித்துகொண்டிருக்க திடீரென்று ஒலித்தது..ப்ளோரிடா!!!!.ஒரே டான்சுதான் போங்க. மறுபடியும் மொக்கயாவே போக புகைபிடிக்க எழுந்துசென்றேன்.. புகையைவிட வேகமாய்!!.வெளியில் எனக்கு முன்னாடியே நிறையபேர் வெளிய சிக்குபுக்கிகொண்டிருந்தார்கள்.ஆண் பெண்ணின் அந்த சம நிலைமையை அங்குதான் காண முடிந்தது எனக்கு!!.ஆண்கள் வெளியே வெறும் தம்மு மட்டும் அடித்துகொண்டிருக்கையில் பெண்கள் கையில் கூடுதலாக பீர்பாட்டில்!!! மீண்டும் உள்ளே சென்றால் டான்ஸ் ப்ளோர் நிரம்பி வழிந்தது பெரும்பாலும் பெண்கள்தான்.எனக்கு ஆரம்பத்திலிருந்தே டவுட்டுதான்,இந்த பெண்களெல்லாம் வாடிக்கையாளர்களா, இல்ல இவனுங்களே செட் பண்ணி ஆட வைக்குரானுங்கலானு!.. யோசித்துக்கொண்டிருக்கயிலே ஒலித்தது ரெஹமானின் மசாக்கஅலீ நன்றாக மிக்ஸ் செய்யபட்டிருந்தது.எந்திரிச்சு ஒரே குத்தாட்டம்தான் போங்க...அன்னைக்கு அந்த டீஜே'வோட பிறந்தநாளாம் இடையில அவன் வேற பேசி பேசி கடுப்பேத்திட்டு இருந்தான்.மறுபடியும் தம் போட வெளியில வரும் போது நிறைய வெளிநாட்டினர் நீக்ரோஸ் உட்பட ஆண் பேதமின்றி கட்டியனைத்துகொண்டு புகையை ருசிக்க அது மரிஜோனவாக இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.தம்மடித்து கொண்டிருக்கையில் தான் யோசித்தேன் இதில் எத்தனை பேர் வீட்டில் பொய் சொல்லி வந்திருப்பார்கள் எத்தனை பேர் வெறும் சரக்கிற்கும் ம்யூசிக்கிற்கும் மட்டும் வந்திருப்பார்கள்..என்று!மறுபடியும் உள்ளே சென்றோம்..உள்ளே போன பத்து நிமிஷத்துல எல்லா லயிட்டையும் போட்டுடானுங்க ரொம்ப கடுப்பாயிடிச்சு.மறுபடியும் வெளியே தம்மடிக்கலாம்'னு வெளியே கிளம்ப அப்பாவின் நம்பரிலிருந்து அழைப்பு!!என்ன படம் முடிஞ்சிடிச்சா...ம்ம் கெளம்பிட்டேன் தோ.. வந்திட்டு இருக்கேன்'னு போன கட் பண்ணிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் வீடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment