Monday, January 10, 2011

பச்சையப்பாஸ் எதிரில் பயங்கர படிப்பாளிகள்.

சென்னையின் புத்தக திருவிழாவிற்கு நானும் சென்றிருந்தேன் என்பதை காமெடியாய் பார்க்கும் நண்பர்களுக்கு சீரியசாவே சொல்றேன்,நானும் படிப்பாளிதான்யா நம்புங்கய்யா.மொதல்ல பார்க்கிங் மாட்டெரில் இருந்தே வருகிறேன்.பைக்க பார்க்கிங்க்ல போட்டு சைட் லாக் கூட பண்ணாம ரொம்பவே குதூகலத்தோடு உள்ளே நுழைந்தேன் ( நுழைவுக் கட்டணம் பெற்றுதான் ).போகும்போதே சாப்பிடுவதற்கான சமாச்சாரங்களை மனதிற்குள் குறித்துக்கொண்டே அரங்கு நோக்கி நடந்தேன்.அரங்கின் உள்ளே நுழைந்ததும் எந்தப் பக்கம் என்ன ஸ்டால் இருக்கு என்பதை பார்க்காமலேயே ( நாம என்னைக்கு மேப்பெல்லாம் பார்த்தோம் ) அப்படியே மெதுவாய் சென்றுகொண்டிருக்கையில்,சிணுங்கியது செல்பேசி.அழைப்பை ஏற்றவுடன் ஏற்கனவே அரங்கில் சுற்றிக் கொண்டிருக்கும் தோழரின் இருப்பிடத்தை அறிய முடிந்தது.நேராய் என் கால்கள் சென்று நின்ற இடம் காலச்சுவடு.அங்கு சென்றபின்தான் தெரிந்தது எழுத்தாளர் அம்பை மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோரின் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நடக்கவுள்ளதென்று.அம்பை அவர்களிடம் பேசிய அந்த இரண்டு நிமிடங்களும் அன்பை முழுவதும் உணர்ந்த தருணமாய் அமைந்தமைக்கு அவர்களை அறிமுகப்படுத்திய நட்பிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். நாமதான் நமக்கு தேவையில்லாத இடத்துல எப்பவும் இருக்குறதில்லையே,ஆகையால் ஒவ்வொரு கடையாய் பார்த்து ஏதோ இதெல்லாம் நம்ம அறிவுக்கு கொஞ்சம் எட்ராபோல இருக்குனு நம்பி கொஞ்சம் புத்தகங்களை வாங்கியப் பின்தான் தெரிந்தது கொண்டு வந்த காசெல்லாம் காலியென்று.கணிசமான பிரபலங்களை இத்திருவிழாவில் பார்க்க நேரிட்டதிலிருந்து ஆரோக்கியம் புலப்பட்டது.இயக்குனர்கள் விக்ரமன்,பாலாஜி சக்திவேல் இவர்களைவிடவும் பிரபலமான நிஜந்தன் போன்றவர்கள் பிரபங்களில் சிலர். ஐம்பது ரூபாய்கூட பெறுமானமில்லாத புத்தகங்களை நூற்றைம்பது,இருநூறு என விற்கும் புத்தக ஆலய "அர்ச்சகர்களுக்கு" இந்த நேரத்தில் என் கண்டனத்தை காணிக்கையாக்குகிறேன்.மிச்சமிருந்த சொச்ச காசிற்கு பாப்-கார்ன் வாங்கி சாப்பிட்டுப் பின் வாட்டர் பாக்கெட் இல்லாத காரணத்தினால் வாட்டர் பாட்டிலை வாங்கி ரெண்டு வாய் குடித்து உடனிருந்த நட்பிடம் குடிக்க கொடுத்தேன்.பின் அந்த தண்ணீர் பாட்டிலைத் திருப்பிகேட்டபோது,நான் அதை கேட்காமலே இருந்திருக்கலாம் என தோன்றிற்று.அப்போதுதான் கேள்விப்பட்டேன் புத்தக அரங்கிற்கு வெளியே நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனின் பேச்சு படு மொக்கையாம்.நமக்கேதும் பாதிப்பில்லை என்ற நிம்மதியுடன் எழுத்தாளர் அம்பையை வழியனுப்ப வாயில் நோக்கி நடக்கையில் சில சிரிப்புகள் உதிர்ந்தது.வெளியில் வந்ததும் நட்பு எகிறிப் போய் ஆட்டோ பிடிக்க,நான் அவர்களை சாந்தமாய் ஏற்றிவிட,இவ்வளவு பெரிய புத்தக சந்தையில்  கடைசி வரையும் தேடிக் கிடைக்காத சரோஜா தேவி புக்கின்றியே முடிவிற்கு வந்தது என் "புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்".என்னடா புத்தக திருவிழாவிற்கு சென்றவன் தான் வாங்கிய புத்தகங்களை குறிப்பிடாமலேயே செல்கிறானே எனக் கேட்பவர்களுக்கு மட்டும் இந்த கடைசி வரிகள்.வாங்கியப் புத்தகங்களை பட்டியலிட்டால் காறித் துப்புகள் அதிகமாய் இருக்குமென தெரிந்தபின்னும் சொல்வதற்கு நான் என்ன முட்டாளா?

5 comments:

  1. No issues. Please tell me the name in my inbox :)Even u wont tell, we can find. After two days those things will be reflected in ur writings brother :)

    ReplyDelete
  2. மெல்வின்,எனக்கு ஆங்கிலம் இவ்வளவு பரீட்சயமில்லை.

    ReplyDelete